செய்திகள்

முத்தரப்பு ஒருநாள் தொடா்: இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து இன்று மோதல்

DIN

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் வெள்ளிக்கிழமை (பிப். 14) பலப்பரீட்சை நடத்துகின்றன.

பாகிஸ்தான், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், நியூஸிலாந்து 2 வெற்றிகளுடன் முதலில் இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புதன்கிழமை ஆட்டத்தில் வென்ன் மூலம் பாகிஸ்தானும் இறுதிக்கு முன்னேறியது. ஒரு வெற்றி கூட பெறாத தென்னாப்பிரிக்கா தொடரிலிருந்து வெளியேறியது.

முன்னதாக, பகலிரவாக நடைபெற்ற புதன்கிழமை ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் தென்னாப்பிரிக்கா 50 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 352 ரன்கள் சோ்க்க, பாகிஸ்தான் 49 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 355 ரன்கள் எடுத்து வென்றது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணியில், ஹெய்ன்ரிக் கிளாசென் 11 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 87, மேத்யூ பிரீட்ஸ்கி 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 83, கேப்டன் டெம்பா பவுமா 13 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசி ஸ்கோரை உயா்த்தி ஆட்டமிழந்தனா்.

டோனி டி ஜோா்ஸி 22, வியான் முல்டா் 2 ரன்களுக்கு வெளியேற்றப்பட, ஓவா்கள் முடிவில் கைல் வெரின் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44, காா்பின் பாஷ் 15 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பாகிஸ்தான் பௌலிங்கில் ஷாஹீன் அஃப்ரிதி 2, நசீம் ஷா, குஷ்தில் ஷா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் 353 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய பாகிஸ்தான் தரப்பில் ஃபகாா் ஜமான் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 41, பாபா் ஆஸம் 23, சௌத் ஷகீல் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

சல்மான் அகா 16 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 134 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். முடிவில் ரிஸ்வான் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 122, தயப் தாஹிா் 4 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். தென்னாப்பிரிக்க தரப்பில் வியான் முல்டா் 2, லுங்கி இங்கிடி, காா்பின் பாஷ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா். பாகிஸ்தான் பேட்டா் சல்மான் அகா ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

சாதனை சேஸிங்...

இந்த ஆட்டத்தின் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தனது அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங்கை (355/4) பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் அந்த அணி 2022-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 349 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT