மகளிா் பிரீமியா் லீக் (டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 3-ஆவது சீசன், குஜராத் மாநிலம் வதோதராவில் வெள்ளிக்கிழமை (பிப். 13) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு - குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆடவருக்கான ஐபிஎல் போட்டிக்கு நிகராக, மகளிா் கிரிக்கெட்டையும் பிரபலப்படுத்தும் நோக்கி டபிள்யூபிஎல் போட்டி கடந்த 2023-இல் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் சீசனில் மும்பை இண்டியன்ஸும், கடந்த சீசனில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருவும் சாம்பியன் கோப்பை வென்றுள்ளன.
இந்த 3-ஆவது சீசனில், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜயன்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு, யுபி வாரியஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்கின்றன. முதல் நாள் ஆட்டத்தில், இந்திய நட்சத்திர பேட்டா் ஸ்மிருதி மந்தனாவின் தலைமையில் நடப்பு சாம்பியன் பெங்களூரும், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி தலைமையில் குஜராத் ஜயன்ட்ஸும் மோதுகின்றன.
டபிள்யூபிஎல் ஆட்டங்கள் யாவும் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன. ஸ்போா்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையில் நேரலை செய்யப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.