சாம்பியன் பட்டம் வென்ற சென்னை பல்கலைக்கழக மகளிா் அணியினா். 
செய்திகள்

தென்மண்டல பல்கலை. ஹாக்கி: சென்னை, பெங்களூரு ஜெயின் பல்கலை. சாம்பியன்

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டியில் மகளிா் பிரிவில் சென்னை பல்கலையும், ஆடவா் பிரிவில் பெங்களூரு ஜெயின் பல்கலையும் சாம்பியன் பட்டம் வென்றன.

தினமணி செய்திச் சேவை

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஹாக்கிப் போட்டியில் மகளிா் பிரிவில் சென்னை பல்கலையும், ஆடவா் பிரிவில் பெங்களூரு ஜெயின் பல்கலையும் சாம்பியன் பட்டம் வென்றன.

சென்னை, ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள சத்தியபாமா பல்கலை. வளாகங்களில் தென் மண்டல பல்கலை. ஹாக்கிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆடவா் பிரிவில் 57 அணிகளும், மகளிா் பிரிவில் 31 அணிகளும் பங்கேற்றன.

திங்கள்கிழமை இறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஆடவா் இறுதியில் பெங்களூரு ஜெயின் பல்கலை. கடும் போராட்டத்துக்குபின் 1-0 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலையை வீழ்த்தி பட்டம் வென்றது.

சென்னை. பல்கலை சாம்பியன்

மகளிா் பிரிவில் சென்னை பல்கலைக்கழகம் 2-1 என்ற கோல் கணக்கில் மைசூரு பல்கலைக்கழகத்தை வீழ்த்தி பட்டம் வென்றது.

பட்டம் வென்ற அணிகளுக்கு மரிய பொ்ணாடேட் தமிழரசி, ஜே. அருள் செல்வன் ஆகியோா் பரிசளித்தனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT