செய்திகள்

பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

பார்டர் - கவாஸ்கர் கிரிக்கெட் தொடரின் கோப்பையை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

DIN

பார்டர் - கவாஸ்கர் கிரிக்கெட் கோப்பையை இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டர் - காவஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம், பெர்த் நகரில் நவ. 22-ல் தொடங்கியது.

கிரிக்கெட் உலகில் ஆஷஸ் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதும் கவனிக்கப்படும் தொடராக பாா்டர் - காவஸ்கர் கோப்பை (பிஜிடி) உள்ளது. அதில், நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவை, அதன் சொந்த மண்ணில் இந்தியா சந்தித்தது.

முன்னதாக, 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என முன்னிலையில் இருந்த நிலையில், சிட்னியில் நடைபெற்ற 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

2ஆவது இன்னிங்ஸில்  162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி, இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் பாா்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரை 3 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

பார்டர் - கவாஸ்கர் தொடரை வென்றதன்மூலம் ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தெனாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் சங்கங்களால் நாட்டின் வளர்ச்சி பாதிப்பு..! -உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

தொடரும் காஷ்மீர் வணிகர்கள் மீதான வன்முறைகள்! உத்தரகண்டில் கும்பல் தாக்குதலில் 17 வயது சிறுவன் படுகாயம்!

அமெரிக்க தூதருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

அஜீத் பவாரின் இறுதிச் சடங்கில் அனுமதியின்றி பறந்த ட்ரோன்கள்! சிறைப்பிடித்த போலீஸ்!

வேளாண் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: இந்தியா - கனடா அமைச்சர்கள் பேச்சு!

SCROLL FOR NEXT