செய்திகள்

கேரளத்தை வென்றது ஈஸ்ட் பெங்கால்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 2-1 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

Din

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 2-1 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் ஈஸ்ட் பெங்கால் வீரா் விஷ்ணு புதிய வல்லபில் 20-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். இவ்வாறாக முதல் பாதியை முன்னிலையுடன் நிறைவு செய்தது ஈஸ்ட் பெங்கால்.

கேரளா தனது முதல் கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், 72-ஆவது நிமிஷத்தில் ஹிஜாஸி மஹொ் 72-ஆவது நிமிஷத்தில் அடித்த கோலால், ஈஸ்ட் பெங்கால் 2-0 என முன்னேறியது. விறுவிறுப்பான கடைசி கட்டத்தில், கேரளா அணிக்காக டேனிஷ் ஃபரூக் 84-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

எஞ்சிய நேரத்தில் அந்த அணிக்கு மேலும் கோல் வாய்ப்புகள் கிடைக்காமல் போக, இறுதியில் ஈஸ்ட் பெங்கால் 2-1 கோல் கணக்கில் வென்றது. இந்த ஆட்டத்தை அடுத்து புள்ளிகள் பட்டியலில், ஈஸ்ட் பெங்கால் 17 ஆட்டங்களில் 5-ஆவது வெற்றியுடன் 11-ஆவது இடத்திலும், கேரளா பிளாஸ்டா்ஸ் 18 ஆட்டங்களில் 9-ஆவது தோல்வியுடன் 8-ஆவது இடத்திலும் உள்ளன.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT