அல்கராஸ், சின்னர்.  படம்: விம்பிள்டன்
செய்திகள்

ஜோகோவிச்சை வீழ்த்திய சின்னர்..! இறுதிப் போட்டியில் அல்கராஸுடன் மோதல்!

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் வென்றவர் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதியில் யானிக் சின்னர், கார்லோஸ் அல்கராஸ் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்கள்.

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் ஜூன் 23 முதல் தொடங்கி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

நேற்றிரவு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச், யானிக் சின்னர் மோதினார்கள். இந்தப் போட்டியில் சின்னர் 6-3, 6-3, 6-4 என்ற நேர்செட்களில் எளிதாக வென்றார்.

முதல் செர்வில் சின்னர் 81 சதவிகிதம் வெல்ல ஜோகோவிச் 77 சதவிகிதம் வென்றார்.

இரண்டாம் செர்வில் சின்னர் 71 சதவிகிதம் வெல்ல, ஜோகோவிச் 17 சதவிகிதம் மட்டுமே வென்றார். இதுதான் ஜோகோவிச்சின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அடுத்ததாக மற்றுமொரு அரையிறுதியில் டெய்லர் ஃபிரிட்ஸ், கார்லோஸ் அல்கராஸ் மோதினார்கள். இந்தப் போட்டியில் 6-4, 5-7, 6-3, 7(8)-6 என்ற செட்களில் அல்கராஸ் வென்றார்.

ஹாட்ரிக் கோப்பை வெல்லும் முனைப்பில் அல்கராஸ் இருக்கிறார். இறுதிப் போட்டி நாளை (ஜூலை 13) நடைபெற இருக்கிறது.

டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் யானிக் சின்னர், இரண்டாம் இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் அல்கராஸுக்கு இடையேயான போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி. சென்றடைந்த இந்திய வீரர்கள்..! பிசிசிஐ வெளியிட்ட விடியோவில் கம்பீர் இல்லை!

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

தென் மாவட்டங்களில் இதுவரை இல்லாத கனமழை; குற்றால அருவிகளில் குளிக்கத் தடை!

அரசியலுக்கு வருவீர்களா? மாரி செல்வராஜ் பதில்!

வடகிழக்குப் பருவமழை தொடக்கம்! வெயில் அடித்தாலும் குடை எடுத்துச் செல்லுங்கள்!!

SCROLL FOR NEXT