பார்சிலோனா அணியின் புதிய நம்.10 ஜெர்ஸி இளம் வீரர் லாமின் யமாலுக்கு வழங்கப்பட்டது.
ஸ்பெயினைச் சேர்ந்த லாமின் யமால் (18 வயது) பார்சிலோனா அணிக்காக 2023ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார்.
பார்சிலோனா அணியில் ஃபார்வேடாக விளையாடும் லாமின் யமால் 25 கோல்கள், 34 அசிஸ்ட்ஸ் செய்துள்ளார். ஸ்பெயினின் தேசிய அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
மெஸ்சியின் எண்ணான நம்.10 கொண்ட ஜெர்ஸியை தற்போது லாமின் யமாலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா அணியில் லாமின் யமாலுக்கு 6 ஆண்டுகள் (2031 வரை) ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட லாமின் யமால் தனது பாட்டியை அழைத்து வந்தார்.
முதன்முதலாக பார்சிலோனாவின் பயிற்சி கூடமான லா மசியாவில் இவரைச் சேர்த்ததுமுதல் இவரது பாட்டி உடன் இருந்திருக்கிறார். அதனால், அவரை வரவழைத்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார்.
பார்சிலோனா அணிக்கு அடுத்த மெஸ்ஸியாக வருவார் என ரசிகர்கள் இவரது திறமையைப் பார்த்துப் புகழ்ந்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.