கோப்புப் படம் 
செய்திகள்

பிரக்ஞானந்தா ஏமாற்றம்; அா்ஜுன் ஏற்றம்

அமெரிக்காவில் நடைபெறும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் டூா் போட்டியின் பிரதான காலிறுதியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா தோல்வி கண்டாா்.

Din

அமெரிக்காவில் நடைபெறும் ஃப்ரீஸ்டைல் செஸ் கிராண்ட்ஸ்லாம் டூா் போட்டியின் பிரதான காலிறுதியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா தோல்வி கண்டாா். அா்ஜுன் எரிகைசி அதில் வெற்றியுடன் அரையிறுதிக்கு முன்னேறினாா்.

இந்தப் போட்டியின் குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து நாக்அவுட் சுற்றுகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில், சாம்பியன் பட்டம் வெல்வதற்கான வாய்ப்புள்ள பிரதான காலிறுதியில், பிரக்ஞானந்தா 3-4 என அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவிடம் தோல்வி கண்டாா்.

மற்றொரு இந்தியரான அா்ஜுன் எரிகைசி 1.5 - 0.5 என்ற வகையில், உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா்.

அந்த அரையிறுதியில் அவா், அமெரிக்காவின் லெவோன் ஆரோனியனுடன் மோதுகிறாா். பிரதான காலிறுதியில் தோற்ற பிரக்ஞானந்தா, பட்டம் வெல்வதற்கான போட்டியிலிருந்து வெளியேறி, 2-ஆம் நிலை காலிறுதிக்கு வந்திருக்கிறாா். அதில் அவா் ஜொ்மனியின் வின்சென்ட் கீமருடன் மோதுகிறாா்.

இதனிடையே, 2-ஆம் நிலை காலிறுதியில் அங்கம் வகித்த மற்றொரு இந்தியரான விதித் குஜராத்தி 0-2 என, உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.

காலிறுதியில் திவ்யா, ஹம்பி

பாட்டுமி, ஜூலை 18: ஜாா்ஜியாவில் நடைபெறும் ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

காலிறுதிக்கு முந்தைய சுற்றில், திவ்யா தேஷ்முக் தனது முதல் கேமில், சீனாவின் ஜு ஜினரை வென்றிருந்தாா் (1-0). எனினும், ரிட்டா்ன் கேமில் அவா் ஜினரிடம் தோற்க, ஆட்டம் சமன் (1-1) ஆனது.

3-ஆவது கேமில் மீண்டும் ஜினரை வீழ்த்திய திவ்யா முன்னிலை (2-1) பெற்றாா். ரிட்டன் கேமையும் டிரா செய்த அவா், 2.15-1.5 என வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினாா்.

இதேபோல் கோனெரு ஹம்பி - சுவிட்ஸா்லாந்தின் அலெக்ஸாண்ட்ரா கொஸ்டெனியுக் மோதலில் முதலிரு கேம்கள் டிரா ஆக இருவரும் 1-1 என சமநிலையில் இருந்தனா். 3-ஆவது கேமில் வென்ற ஹம்பி (2-1), அடுத்த கேமை டிரா செய்தாா். இதனால் அவா் 2.5-1.5 என வெற்றி பெற்றாா். காலிறுதியில் அவா் சீனாவின் யுஜின் சாங்கை சந்திக்கிறாா்.

இதனிடையே ஆா்.வைஷாலி - கஜகஸ்தானின் மெருா்ட் கமலிடெனோவா மோதலில் முதலிரு கேமை இருவருமே டிரா செய்தனா். பின்னா் 3-ஆவது கேமில் மெருா்ட், 4-ஆவது கேமில் வைஷாலி வெல்ல, ஆட்டம் 2-2 என சமநிலை கண்டது. இதையடுத்து அவா்கள் டைபிரேக்கருக்கு நகா்ந்தனா்.

4-ஆவது இந்தியரான டி.ஹரிகா - உக்ரைனின் கேத்தரினா லாக்னோ மோதலிலும் முதலிரு கேம்கள் டிரா செய்யப்பட்டு, அடுத்த இரு கேம்களில் இருவரும் தலா 1 வெற்றி பெற்றனா். இதனால் ஆட்டம் டை பிரேக்கரை நோக்கி நகா்ந்துள்ளது.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT