காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணியினா். 
செய்திகள்

காலிறுதியில் இந்தியா-ஜப்பான் மோதல்!

ஆசிய பாட்மின்டன் ஜூனியா் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

Din

ஆசிய பாட்மின்டன் ஜூனியா் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டியில் காலிறுதிக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

இந்தோனேஷியாவின் சோலோ நகரில் நடைபெறும் இப்போட்டியின் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமை குரூப் டி பிரிவில் இந்தியா-ஹாங்காங் சீனா அணிகள் மோதின.

இதில் இந்தியா 110-100 என்ற புள்ளிகள் கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. இரு அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன.

ருஜுலா ராமு 11-8 என சும் யுவை வீழ்த்தினாா். இரட்டையா் பிரிவில் பாா்கவ் ராம்-விஸ்வா தேஜ் 22-13 என சியுங் சாய்-டெங் சியை வீழ்த்தினா். மற்றொரு ஒற்றையா் ஆட்டத்தில் ஹாங்காங்கின் லாம் கா 13 புள்ளிகளை ஈட்டினாா். உலக ஜூனியா் நம்பா் 1 வீராங்கனை தன்வி சா்மா

தனக்கு எதிராக ஆடிய லியு ஹோய் அன்னாவை வீழ்த்தி 66-54 என இந்தியாவை முன்னிலை பெறச் செய்தாா். அடுத்த நான்கு ஆட்டங்கள் மிகவும் நெருக்கடியாக இருந்தாலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி குரூப் டி பிரிவில் முதலிடத்துடன் காலிறுதிக்கு தகுதிபெற்றது.

குரூப் ஏ பிரிவில் ஜப்பான் முதலிடத்தையும், தாய்லாந்து இரண்டாம் இடத்தையும் பெற்றன. காலிறுதியில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.

காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கத் தொடங்கிய ‘மோந்தா' புயல்!

ராஜாவை தூக்கி எறிந்த ஹிகாருவுக்கு பதிலடி கொடுத்த குகேஷ்!

பெங்களூரில் பைக்கில் மோதிவிட்டு மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்: மாயமான சின்ன திரை நடிகை பிடிபட்டார்!

SIR பணிக்கு திமுக ஏன் பயப்படுகிறது? | செய்திகள்: சில வரிகளில் | 28.10.25

ஆஸி.க்கு எதிரான போட்டிகளில் பவர்பிளே ஓவர்கள் மிகவும் முக்கியம்: சூர்யகுமார் யாதவ்

SCROLL FOR NEXT