ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் ஆக மகுடம் சூடியுள்ள இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் புதன்கிழமை(ஜூலை 30) தாயகம் திரும்பினார். அவருக்கு அவரது சொந்த ஊரான நாக்பூரில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
ஜாா்ஜியாவின் பாட்டுமி நகரில் நடைபெற்ற 3-ஆவது மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டிக்கு, அவருடன் அவரது தாயாரும் சென்றிருந்த நிலையில், இருவரும் நாக்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அப்போது பேசிய அவர், "எனது பெற்றோர்கள், சகோதரி மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும், எனது முதல் பயிற்சியாளருக்கும் இந்த வெற்றிக்கான அங்கீகாரத்தை சமர்ப்பிக்கிறேன்" என்றார்.
இதையும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் இறுதிச்சடங்குக்கு சென்றதுகூட சாதி ரீதியாகப் பார்க்கப்பட்டது! துரை வைகோ பேசியது என்ன? உடைக்கும் Mallai Sathya
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.