மார்ச் 31-க்குள் 300 நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரம்!
மார்ச் 31-க்குள் 300 நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவது குறித்து...
மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடு முடிவதற்குள் 300 நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள நக்சல்கள் அனைவரும் வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் உறுதியளித்துள்ளது. இதையடுத்து, அதற்கான நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சத்தீஸ்கர், தெலங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இயங்கி வரும் நக்சல்களைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதன்மூலம், மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய தலைவர்களான மிசிர் பெஸ்ரா (எ) பாஸ்கர், தேவ்ஜி (எ) கும்பா தாதா, ராமண்ணா (எ) கணபதி மற்றும் மல்லா ராஜ ரெட்டி (எ) சாகர் ஆகியோரைத் தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் தேவ்ஜி மற்றும் அவரது கூட்டாளியான கேசா சோதி ஆகியோர் பதுங்கியுள்ளதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 17) மாபெரும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மல்லா ராஜ ரெட்டியை தவிர மற்ற நக்சல் தளபதிகள் ஒடிசாவின் வனப்பகுதிக்குள் பதுங்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர்களைப் பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, முக்கிய தலைவர்கள் 4 பேர் உள்பட சுமார் 300 நக்சல்கள் தற்போது தேடப்பட்டு வருகின்றனர். இதனால், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் அவர்கள் அனைவரும் சரணடைய வேண்டும் அல்லது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் அவர்கள் கொல்லப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
security forces are carrying out operations to eliminate 300 Naxalites, including 4 senior commanders, before the deadline set by the central government expires.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.