ரொனால்டோ படம்: ஏபி
செய்திகள்

25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனியை வீழ்த்திய போர்ச்சுகல்: 40 வயதிலும் அசத்தும் ரொனால்டோ!

போர்ச்சுகல் கால்பந்து அணி நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை குறித்து...

DIN

நேஷ்னல் லீக் கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

ஜெர்மனியில் நடைபெற்ற நேஷனல் லீக் அரையிறுதியில் போர்ச்சுகல் அணியும் ஜெர்மனியும் மோதின.

இந்தப் போட்டியில் 2-1 என போர்ச்சுகல் அணி வென்றது. இதில், முதல் பாதியில் இரு அணிகளுமே கோல்கள் அடிக்காத நிலையில் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே (48’) ஜெர்மனி கோல் அடித்தது.

அடுத்ததாக போர்ச்சுகல் 63, 68ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து முன்னிலை வகித்தது.

சாபத்தை முறியடித்த ரொனால்டோ

இதில் ரொனால்டோ 68ஆவது நிமிஷத்தில் நூனோ மென்டிஸ் செய்த அசிஸ்டில் கோல் அடித்து அசத்தினார்.

கடைசியாக 2000ஆம் ஆண்டு ஜெர்மனியை வீழ்த்தியிருந்த போர்ச்சுகல் தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு வென்று வரலாற்றை மாற்றியமைத்துள்ளது.

கடைசி 5 போட்டிகளிலும் ரொனால்டோ ஜெர்மனியுடன் கோல் அடிக்காத நிலையில் அதையும் இந்தப் போட்டியில் முறியடித்தார்.

இதன் மூலம், ரொனால்டோ தனது 137-ஆவது சர்வதேச கோலை நிறைவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

இருசக்கர வாகனங்கள் மோதல்: முதியவா் உயிரிழப்பு

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

ஊக்கத் தொகையுடன் அா்ச்சகா் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழா்கள் ஆா்வம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT