சாம்பியன்ஸ் லீக்கில் 15 முறை கோப்பை வென்ற ஆண்ட பரம்பரையாக இருக்கும் ரியல் மாட்ரிட் அணி 2-4 என்ற கோல் கணக்கில் பென்ஃபிகாவிடம் தோல்வியுற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
இந்தத் தோல்வியின் மூலமாக ரியல் மாட்ரிட் அணி டாப் 8-ல் இடம்பிடிக்காமல், கடைசி 16 பட்டியலில் இடம் பிடித்தது.
பென்ஃபிகா அணி தனது சொந்த திடலான லிஸ்பனில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிளியன் எம்பாபே 30 ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, பென்ஃபிகா 36-அவது நிமிஷத்தில் சமன் செய்தது.
முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் பெனால்டியில் கோல் அடித்து பென்ஃபிகா 2-1 என முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் 54-ஆவது நிமிஷத்தில் பென்ஃபிகா மீண்டும் கோல் அடித்து 3-1 முன்னிலையை நீட்டித்தது. எம்பாபே மீண்டும் கோல் அடித்து 2-3 என மாற்றினார்.
இந்தப் போட்டியில் 2-3 என ரியல் மாட்ரிட் தோல்வியுற்றாலும் டாப் 8-ல் இடம் பிடித்திருக்கும். ஆனால், ஸ்டாப்பேஜ் நேரத்தில் (காயம், விஏஆர், கொண்டாட்டத்தினால் ஏற்படும் இடைவெளியை சரிசெய்யும் கூடுதல் நேரம்) கோல் கீப்பர் தனது தலையால் கோல் அடித்து 2-4 என ரியல் மாட்ரிட் தோல்வியுற்றது.
இந்தத் தோல்வியினால் ரியல் மாட்ரிட் அணி 9-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. பென்ஃபிகா அணி டாப் 24 அணியில் இடம்பிடித்து, பிளே-ஆஃப் குவாலிஃபயர் சுற்றுக்குத் தேர்வானது.
கோல் அடித்த பென்ஃபிகா கோல் கீப்பர் அனடோலி ட்ரூபின், “எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பைத்தியக்காரத்தனமான தருணம் இது.
எனக்கு 24 வயதாகிறது. இதுவரை நான் கோல் அடித்ததில்லை. இதுதான் எனது முதல் கோல். நம்பவே முடியவில்லை” எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.