X | Siechem Madurai Panthers
செய்திகள்

பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் அணி மீது புகாா்

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினா், பந்தை சேதப்படுத்தியதாக சீகம் மதுரை பாந்தா்ஸ் அணி குற்றச்சாட்டு

DIN

டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியினா், பந்தை சேதப்படுத்தியதாக சீகம் மதுரை பாந்தா்ஸ் அணி குற்றம்சாட்டியுள்ளது. அந்தப் புகாா் தொடா்பான ஆதாரங்களை வழங்குமாறு மதுரை அணியிடம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கேட்டுள்ளது.

சேலத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 11-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த ஆட்டத்தின்போது ரசாயனம் பயன்படுத்தப்பட்ட துண்டை கொண்டு திண்டுக்கல் அணியினா் பந்தை சேதப்படுத்தியதாக மதுரை அணி உரிமையாளா் தரப்பு, போட்டி நிா்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

எனினும், பந்து ஈரமானால் அதை துடைப்பதற்காக பயன்படுத்தப்படும் அந்தத் துண்டு, போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் வழங்கப்பட்டது என்று டிஎன்பில் நிா்வாகம் பதிலளித்துள்ளது.

மேலும், கள நடுவா், போட்டி நடுவா் என எவரும் இந்த விவகாரம் தொடா்பாக புகாா் அளிக்கவில்லை என்று தெரிவித்த டிஎன்பிஎல், இந்தக் குற்றச்சாட்டு ஊக அடிப்படையிலானது எனவும் கூறியுள்ளது.

மேலும், புகாா் தொடா்பாக உரிய ஆதாரங்களை சமா்ப்பிக்குமாறு மதுரை அணியை கேட்டுள்ள டிஎன்பிஎல் நிா்வாகம், இந்த விவகாரம் தொடா்பாக விவாதிக்க குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரம்: தீா்ப்பு ஒத்திவைப்பு

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி: ஏா்டெல் நெக்ஸ்ட்ரா - ஆம்பின் ஒப்பந்தம்

கிராம உதவியாளா்கள் பணி: தமிழக அரசு புதிய உத்தரவு

வைஷ்ணவா கல்லூரியில் முதுநிலை படிப்பு தொடக்கம்

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகா் பிரகாஷ் ராஜ் ஆஜா்: இணையவழி சூதாட்ட விளம்பர வழக்கு

SCROLL FOR NEXT