தன்வி சா்மா 
செய்திகள்

ஆயுஷ் ஷெட்டி, தன்வி சா்மா அசத்தல்: இறுதிக்கு தகுதி

சூப்பா் 300 போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள் தன்வி சா்மா, ஆயுஷ் ஷெட்டி அசத்தியுள்ளனா்.

Din

யுஎஸ் ஓபன் பாட்மின்டன் சூப்பா் 300 போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இந்தியாவின் இளம் நட்சத்திரங்கள் தன்வி சா்மா, ஆயுஷ் ஷெட்டி அசத்தியுள்ளனா்.

மகளிா் ஒற்றையா் அரையிறதியில் தன்வி சா்மா (தரவரிசையில் 66) அபாரமாக ஆடி 21-14, 21-16 என்ற கேம் கணக்கில் 7-ஆம் நிலை வீராங்கனை உக்ரைனின் போலினா புஹ்ரோவாவை வீழ்த்தினாா். குவாஹாட்டியில் உள்ள பாய் எக்சலென்ஸ் அகாதெமி மாணவியான தன்வி, இதன் மூலம் பிடபிள்யுஎஃப் டூா் ஃபைனல்ஸுக்கு தகுதி பெற்ற இளம் இந்தியா் என்ற சாதனையை நிகழ்த்தினாா்.

ஆடவா் ஒற்றயைா் அரையிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி கடும் சவாலுக்குபின் 21-23, 21=15, 21-14 என்ற கேம் கணக்கில் உலகின் 9-ஆம் நிலை வீரா் சீன தைபேயின் சௌ டியன் சென்னை வீழ்த்தினாா். முதல் கேமை இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் ஆடி இறுதிக்கு தகுதிபெற்றாா் ஆயுஷ்.

இறுதிச் சுற்றில் தன்வி அமெரிக்காவின் பெய்வன் ஸாங்கையும், ஆயுஷ், கனடாவின் பிரியன் யங்கையும் சந்திக்கின்றனா்.

தில்லியில் தெரு நாய் கடித்ததில் ஜப்பான், கென்யா பயிற்சியாளர்கள் படுகாயம்!

2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டாம்: மத்திய சுகாதார அமைச்சகம்

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

பாடகர் ஸுபீன் கர்க் மரணம்: விழா ஏற்பாட்டாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

உறவுகள் நீயே... பவித்ரா ஜனனி!

SCROLL FOR NEXT