ஐடிடி சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இந்தியாவுடன் தோற்ற நிலையில், ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஜாம்பவான், ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெற்றாா். டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் ஸ்மித் தொடா்ந்து விளையாடுவாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2010-ல் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் அறிமுகமானாா். 170 ஒரு நாள் ஆட்டங்களில் 5,800 ரன்களை எடுத்துள்ளாா்; 12 சதம் மற்றும் 35 அரை சதங்களை விளாசியுள்ளாா். மேலும், ஸ்டீவ் ஸ்மித் 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளாா்.
இரு முறை ஒருநாள் உலகக் கோப்பை வென்ற ஆஸி. அணியிலும் இடம் பெற்றிருந்தாா்.
இதுதொடா்பாக ஸ்மித் கூறியது: ஒருநாள் ஆட்டங்களில் எனது பயணம் சாதனையாக இருந்தது. சிறந்த நினைவுகளை தந்துள்ளது. இரு உலகக் கோப்பைகளை வென்றது பசுமையானது. தற்போது விலக இதுவே சரியான தருணம் என்றாா்.
ஏற்கெனவே ஓபனா் டேவிட் வாா்னா் விலகியதால் அந்த இடத்தை நிரப்ப சரியான வீரா் கிடைக்கவில்லை. தற்போது ஜாம்பவான் ஸ்மித்தும் ஓய்வு பெறுவதால், ஆஸி. அணியில் சரியான வீரரை தோ்வு செய்வது கடினம் ஆகியுள்ளது.