மெஸ்ஸி.  படம்: ஏபி
செய்திகள்

வாமோஸ் ஆர்ஜென்டீனா..! தகுதிச் சுற்றில் விளையாடாதது குறித்து மனம் திறந்த மெஸ்ஸி!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடாதது குறித்து மெஸ்ஸி பேசியதாவது...

DIN

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடாதது குறித்து மெஸ்ஸி வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார்.

கடந்த 2022இல் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி வென்றது.

37 வயதாகும் லியோனல் மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

உருகுவே, பிரேசில் உடனான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான ஆர்ஜென்டீனா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் மெஸ்ஸியைத் தவிர்த்து 25 பேர் கொண்ட அணியை லியோனல் ஸ்கலோனிஅறிவித்தார்.

தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தினால் மெஸ்ஸி விலகியுள்ளார்.

இது குறித்து மெஸ்ஸி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் கூறியதாவது:

உருகுவே, பிரேசிலுக்கு எதிரான தேசிய அணிக்கான 2 சிறப்புப் போட்டிகளை இழப்பது மிகவும் கவலையளிக்கிறது.

எப்போதும் அங்கு இருக்கவே விரும்புகிறேன். ஆனால், கடைசி நேரத்தில் மிகவும் சீரியஸ் அல்லாத ஒரு காயம் ஏற்பட்டதால் என்னால் விளையாட முடியாமல் சென்றது.

இங்கிருந்து, நானும் ஒரு ரசிகனாக ஆதரவினையும் கொண்டாட்டத்தையும் தெரிவிக்கிறேன். வாமோஸ் (செல்லுங்கள்) ஆர்ஜென்டீனா எனக் கூறியுள்ளார்.

னது ஒட்டுமொத்தமாக 854ஆவது கோலை கடைசியாக இன்டர் மியாமி அணியில் பூர்த்தி செய்தார். அதனால் அந்த அணி 2-1 என வென்றது.

மெஸ்ஸி பகிர்ந்த பதிவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”அந்தக் கேள்வி அவர்கிட்ட கேட்டேன்” விட்டுக் கொடுக்காமல் பேசிய Ravi Mohan!

Ravi Mohan, S.J. Suryah-வை கலாய்த்த Sivakarthikeyan!

வாக்குரிமைப் பேரணி: ராகுலுடன் இணைந்த பிரியங்கா, ரேவந்த் ரெட்டி!

பாகிஸ்தானில் கடும் வெள்ள அபாய எச்சரிக்கை! 24,000 பேர் வெளியேற்றம்!

'வருந்தச் செய்யும்' ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு! யாருக்குத்தான் டிக்கெட் கிடைக்கிறது?

SCROLL FOR NEXT