டொனால்டு டிரம்ப், இமான் கெலிஃப். கோப்புப் படங்கள்.
செய்திகள்

டிரம்ப்பின் பாலின நிலைப்பாடு குறித்து கவலையில்லை: இமென் கெலிஃப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பாலின நிலைப்பாடு குறித்து இமான் கெலிஃப் கூறியதாவது...

DIN

அல்ஜீரியன் குத்துச்சண்டை வீராங்கனை இமான் கெலிஃப் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் நிலைப்பாடு தன்னை அச்சுறுத்துவதாக இல்லையெனக் கூறியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவில் அல்ஜீரியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான இமேன் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றார்.

இமேன் கெலிஃப் கடந்தாண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் குரோமோசோம் சோதனையில் தோல்வியடைந்தார். ஆனால், ஒலிம்பிக் நிர்வாகம் அவர் சரியான பாலின தகுதிப் பெற்றுள்ளதாக இந்த பாரீஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதி அளித்தது.

ஆனால், தொடர்ந்து அவரின் பாலினம் குறித்த சர்ச்சைகள் எழுந்துவந்தன. பின்னர், அவர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க இருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.

டிரம்ப்பின் முடிவினால் கவலையில்லை

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இமான் கெலிஃப் கூறியதாவது:

நான் உங்களுக்கு வெளிப்படையான பதிலை சொல்கிறேன். அமெரிக்க அதிபரின் பாலின நிலைபாடு குறித்து எனக்குத் தெரியும். நான் திருநம்பி கிடையாது. அதனால், எனக்கு இது குறித்து கவலை இல்லை.

அமெரிக்க அதிபரின் முடிவு என்னை அச்சுறுத்தவும் இல்லை. இதுதான் என்னுடைய பதில்.

மற்ற பெண்களைப் போலவும் நான் என்னையும் ஒரு பெண்ணாகவேப் பார்க்கிறேன். பெண்ணாகப் பிறந்தேன், பெண்ணாகவே வளர்ந்தேன், என் வாழ்க்கை முழுவதும் அப்படியே பார்க்கிறேன்.

சாதிக்க தொடங்கியதும் பிரச்னை

நான் 4 உலக சாம்பியன்ஷிப்கள், டோக்கியோ ஒலிம்பிக், மற்ற பெரிய போட்டிகளில் பங்குபெற்றுள்ளேன்.

இவையெல்லாம் இதற்கு முன்பும் நான் வெற்றிப்பெறும்போது இருந்தன. ஆனால், நான் சாதிக்கத் தொடங்கிய உடனே இந்த வெறுப்புப் பிரசாரங்கள் எனக்கு எதிராகத் தொடங்கின என்றார்.

அமெரிக்க அதிபரான டிரம்ப் சமீபத்தில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்கத் தடைவிதிக்கும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

EPS- உடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்கலாம் - TTV Dhinakaran

ஹாலிவுட் தொடரில் நடிக்கும் சித்தார்த்!

SCROLL FOR NEXT