போர்ச்சுகல் நாட்டின் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 22 ஆண்டு தேசிய விளையாட்டு போட்டியில் முதல்முறையாக ரெட் கார்டு வாங்கினார்.
இதன்மூலம், உலகக் கோப்பையின் முதல் போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
அயர்லாந்து உடனான ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் போர்ச்சுகல் அணி மோதியது.
இந்தப் போட்டியில் அயர்லாந்து 2-0 என வென்றது. இதில், 61-ஆவது நிமிஷத்தில் ரொனால்டோ வெளியேற்றப்பட்டார்.
அயர்லாந்து வீரரை தனது முட்டியினால் வேண்டுமென்றே இடித்ததால் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கீழே விழுந்த நபரை அழ வேண்டாம் என ரொனால்டோ கிண்டல் செய்தார். ரெட் கார்டு கொடுத்ததும் ரொனால்டோவைப் பார்த்து அயர்லாந்து ரசிகர்கள் அழ வேண்டாமென சைகை செய்தனர்.
குரூப் எஃப் பிரிவில் போர்ச்சுகல் அணி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகளுடன் ஹங்கேரி இரண்டாமிடமும் 7 புள்ளிகளுடன் அயர்லாந்து மூன்றாமிடமும் வகிக்கிறது.
ஹங்கேரியின் ஆட்டத்தை வைத்து நாளை போர்ச்சுகலின் உலகக் கோப்பை உறுதிசெய்யப்படும்.
அப்படி போர்ச்சுகல் தேர்வாகும்பட்சத்தில், உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ரொனால்டோ விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால் ரொனால்டோவின் சைகைகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், இரண்டு போட்டிகளில் தடை செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.