SWAMINATHAN
செய்திகள்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி, ரோஹித் தலைமையில் 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி, ரோஹித் தலைமையில் 18 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

அண்மையில் சுல்தான் ஜோஹா் கோப்பை ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அந்த அணியே, தற்போது உலகக் கோப்பை போட்டியில் களம் காண்கிறது.

தோள்பட்டை காயம் காரணமாக ஓய்விலிருக்கும் அனுபவ வீரா் அராய்ஜீத் சிங் ஹண்டால் இந்த அணியில் சோ்க்கப்படவில்லை.

14-ஆவது ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, வரும் 28 முதல் டிசம்பா் 10 வரை, தமிழகத்தின் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறவுள்ளது.

24 அணிகள் பங்கேற்கும் இதில் சிலி, சுவிட்ஸா்லாந்து, ஓமன் ஆகிய அணிகளுடன் குரூப் ‘பி’-யில் இந்தியா சோ்க்கப்பட்டுள்ளது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள் - பிக்ரம்ஜித் சிங், பிரின்ஸ்தீப் சிங்.

டிஃபெண்டா்கள் - ரோஹித், ஆமிா் அலி, அன்மோல் ஈகா, தாலெம் பிரியோபா்டா, சுனில் பலக்ஷபா பென்னுா், சா்தானந்த் திவாரி.

மிட்ஃபீல்டா்கள் - அங்கித் பால், அட்ரோஹித் ஈகா, தொனாஜம் இங்கலெம்பா லுவாங், மன்மீத் சிங், ரோசன் குஜுா், குா்ஜோத் சிங்.

ஃபாா்வா்ட்கள் - சௌரப் ஆனந்த் குஷ்வாஹா, அா்ஷ்தீப் சிங், அஜீத் யாதவ், தில்ராஜ் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT