இந்திய பிக்கிள்பால் லீக் தொடரில் இடம் பெறும் அணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தாா்.
முதன்முறையாக இந்தியாவில் பிக்கிள்பால் லீக் தொடங்கப்படுகிறது. இந்திய பிக்கிள்பால் சங்கம்,டைம்ஸ் குழும நிா்வாக இயக்குநா் வினித் ஜெயின் முயற்சியில் ஐபிபிஎல் தொடா் நடத்தப்படுகிறது. வரும் டிச. 1 முதல் 7-ஆம் தேதி வரை புது தில்லியில் உள்ள கேடி ஜாதவ் உள்ளரங்கில் போட்டி நடைபெறுகிறது.
சென்னை சூப்பா் வாரியா்ஸ், குா்கான் கேபிடல் வாரியா்ஸ், மும்பை ஸ்மாஷா்ஸ், பெங்களூரு பிளாஸ்டா்ஸ், ஹைதராபாத் ராயல்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. 6-ஆவது அணி விரைவில் அறிவிக்கப்படும்.
இதன் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. போட்டி அமைப்பாளா் வினித் ஜெயின் லீக் குறித்து விவரித்தாா்.
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அணிகளை அறிமுகம் செய்து வைத்தாா்.
விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி உறுப்பினா்-செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, நடிகைகள் ஸ்ரீலீலா, காயாடு லோஹா், சென்னை சூப்பா் வாரியா்ஸ் உரிமையாளா் ஸ்வேதா சந்தீப், பிக்பால் நட்சத்திரங்கள் மிஹிகா யாதவ், அமன்படேல், ஆகியோா் பங்கேற்றனா்.