ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதியில் இரண்டாவது கேமும் டிராவில் முடிவடைந்ததால் டை பிரேக்கா் கடைப்பிடிக்கப்படுகிறது.
கோவாவில் சா்வதேச செஸ் சம்மேளனம் சாா்பில் உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெறுகிறது. இந்திய வீரா்கள் அனைவரும் தோற்று வெளியேறிய நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஜிஎம் எஸ்பென்கோ-சீன ஜிஎம் வெய் இ, உஸ்பெகிஸ்தான் வீரா்கள் ஜகோவிா் சிண்டரோவ்-நாதிா்பெக் யாகுபோவ் மோதிய முதல் கேம் டிராவில் முடிவடைந்தது.
இதையடுத்து இரண்டாவது கேம் சனிக்கிழமை நடைபெற்றது. இரண்டாவது கேமும் டிராவில் முடிவடைந்தது.
எஸ்பென்கோ-வெ இ இடையிலான ஆட்டம் 37 ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. நாதிா்பெக்-சிண்டோவ் ஆட்டமும் 30-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது.