கால்பந்து வரலாற்றில் 1,300 கோல்களில் பங்களித்த முதல் வீரராக லியோனல் மெஸ்ஸி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
தனது கால்பந்து பயணத்தில் மொத்தமாக மெஸ்ஸி 896 கோல்கள், 404 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தியுள்ளார்.
எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி முதல்முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபரன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தப் போட்டியில் மெஸ்ஸி ஹாட்ரிக் அசிஸ்ட், 1 கோல் அடித்து ஆட்ட நாயகன் விருதினை வென்றார்.
மெஸ்ஸி - ரொனால்டோ ஒப்பீடு
இதன்மூலமாக கோல்கள் பங்களிப்பில் 1,300 (896 கோல்கள் + 404 அசிஸ்ட்ஸ்) என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரராக வரலாறு படைத்துள்ளார்.
அதிக கோல்கள் அடித்துள்ள கிறிஸ்டியானோ ரொனால்டோ 1,213 கோல்கள் பங்களிப்பை (954 கோல்கள் + 259 அசிஸ்ட்ஸ்) நிகழ்த்தியுள்ளார்.
ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் மெஸ்ஸி இந்த வரலாற்றை நிகழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கால்பந்தின் அரசன் மெஸ்ஸி...
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38 வயது) பார்சிலோனா கிளப்பில்தான் அதிக கோல்கள் அடித்துள்ளார்.
மெஸ்ஸியின் கோல்கள் பங்களிப்பு விவரங்கள்
பார்சிலோனா - 941 (672 கோல்கள் & 269 அசிஸ்ட்ஸ்)
ஆர்ஜென்டீனா - 117 (114 கோல்கள் & 62 அசிஸ்ட்ஸ்)
பிஎஸ்ஜி - 66 (32 கோல்கள் & 34 அசிஸ்ட்ஸ்)
இன்டர் மியாமி - 117 (78 கோல்கள் & 39 அசிஸ்ட்ஸ்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.