எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி முதல்முறையாக ஈஸ்டர்ன் கான்ஃபரன்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
இந்தப் போட்டியிலும் லியோனல் மெஸ்ஸி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஈஸ்டர்ன் கான்ஃபரன்ஸ் அரையிறுதிப் போட்டியில் இnடர் மியாமியும் எப்ஃசி சின்சினாட்டி அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 4-0 என இன்டர் மியாமி அணி அபார வெற்றி பெற்றது. மெஸ்ஸி 19-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். மேலும், 3 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தினார்.
இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக மெஸ்ஸி தேர்வானார். ஆர்ஜென்டீன வீரர்களான லியோனல் மெஸ்ஸி, மதியோ சில்வெட்டி, தடியோ அல்லெண்டியின் செயல்பாடுகள் வியக்க வைத்தது.
கான்பரஸ் இறுதிப் போட்டியில் மியாமியுடன் நியூயார்க் சிட்டியும் மோதுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.