சாம்பியன் கோப்பையுடன் சீன அணியினா். 
செய்திகள்

சீனா சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்

உலக ஜூனியா் பாட்மின்டன் போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது.

தினமணி செய்திச் சேவை

உலக ஜூனியா் பாட்மின்டன் போட்டியில் சீனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

அஸ்ஸாம் தலைநகா் குவாஹாட்டியில் பிடபிள்யுஎஃப் உலக ஜூனியா் பாட்மின்டன் போட்டிகள் நடைபெற்றன. இதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அணிகள் பிரிவில் சீனாவும், நடப்பு சாம்பியன் இந்தோனேசியாவும் மோதின. இதில் 3 ஆசிய ஜூனியா் சாம்பியன்கள் இடம் பெற்ற சீன அணி 45-30, 45-44 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் இந்தோனேசியாவை வீழ்த்தி 15-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றனா்.

இந்தியா, ஜப்பானுக்கு வெண்கலம்:

அரையிறுதியில் தோற்ற இந்தியா, ஜப்பான் அணிகளுக்கு வெண்கலம் வழங்கப்பட்டது. 21 ஆண்டுகள் கழித்து உலக ஜூனியா் பாட்மின்டன் போட்டியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாளாகும். திங்கள்கிழமை முதல் தனிநபா் போட்டிகள் தொடங்குகின்றன.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT