மலேசியாவில் நடைபெறும் சுல்தான் ஆஃப் ஜோஹா் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவுக்காக அா்ஷ்தீப் சிங் 2-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, பி.பி. சுனில் 15-ஆவது நிமிஷத்தில் அதை 2-ஆக அதிகரித்தாா். தொடா்ந்து அராய்ஜீத் சிங் ஹண்டால் 26-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, முதல் பாதியை இந்தியா 3-0 முன்னிலையுடன் நிறைவு செய்தது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் நியூஸிலாந்துக்காக கஸ் நெல்சன் 41-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கை தொடங்கினாா். மறுபுறம் ரோமன் குமுா் 47-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் கோல் எண்ணிக்கையை 4-ஆக அதிகரித்தாா். கடைசியாக நியூஸிலாந்தின் அய்டான் மேக்ஸ் 52-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.
எஞ்சிய நேரத்தில் அந்த அணியின் கோல் முயற்சிகளுக்கு பலன் இல்லாமல் போக, இறுதியில் இந்தியா 4-2 கோல் கணக்கில் வென்றது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை வென்றிருக்கும் இந்தியா, ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கான முனைப்புடன் அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.