கால்பந்து உலகக் கோப்பை 2026-க்காக இதுவரை 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாக்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் டிக்கெட் விற்பனைகள் தொடங்கின.
இந்த உலகக் கோப்பை போட்டிகள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்க இருப்பதால் அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகமானவர்கள் டிக்கெட் வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் 212 நாடுகளில் இருந்து ரசிகர்கள் ஏற்கெனவே டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்கள். இருந்தும் 48-இல் 28 திடல்களில் மட்டுமே நிரம்பியிருப்பதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் அடுத்தாண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற இருக்கின்றன.
டிக்கெட் வாங்கும் நாடுகளில் டாப் 10 நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், ஸ்பெயின், கொலம்பியா, ஆர்ஜென்டீனா, பிரான்ஸ் என்ற வரிசையில் இருக்கின்றன.
48 நாடுகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதுவரை 28 நாடுகள் தேர்வாகியுள்ளன.
இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விலைகள் 9,538 முதல் 57,500 அமெரிக்க டாலர்கள் வரை என மூன்று விதங்களில் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
16 வட அமெரிக்க திடல்களில் சுமார் 70 லட்சம் இடங்கள் நிரம்பியுள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.