கோல் அடித்த மகிழ்ச்சியில் பார்சிலோனா வீரர்.  படம்: ஏபி
செய்திகள்

90+3-ஆவது நிமிஷத்தில் கோல்... பார்சிலோனா முதலிடத்துக்கு முன்னேற்றம்!

லா லீகா தொடரில் அசத்திய பார்சிலோனா குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடுத்து, 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் முலமாக பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியில் 13-ஆவது நிமிஷத்தில் பெட்ரி கோல் அடித்தார். 20-ஆவது நிமிஷத்தில் கிரோனா அணியின் அசெல் விக்செல் கோல் அடித்து சமன்படுத்தினார்.

பின்னர், இரண்டு அணிகளும் போராடி 90 நிமிஷம் வரை எந்த கோலும் அடிக்க முடியவில்லை.

ஸ்டாபேஜ் நேரத்தில் 90+3-ஆவது நிமிஷத்தில் ரொனால்டு அரௌகா சிறப்பான கோல் அடித்தார். இதன் மூலம் 2-1 என த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 22 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

Barcelona scored a goal in stoppage time to secure a thrilling 2-1 victory in the La Liga football series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT