மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வங்கதேச அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகின்றன. நவி மும்பையில், இன்று (அக். 20) நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில்; 48.4 ஓவர்களில் 203 ரன்களை குவித்து இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகப்படியாக, இலங்கை அணியின் வீராங்கனை ஹாசினி பெரேரா 85 ரன்களும், சாமாரி அத்தபத்து 46 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, விளையாடிய வங்கதேச அணியின் வீராங்கனைகள் நிகார் சுல்தானா (77) மற்றும் ஷார்மின் அக்தர் (64) ஆகியோர் அரை சதங்கள் அடித்து அசத்தினர்.
இருப்பினும், இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல், 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்களை எடுத்து வங்கதேச அணி தோல்வியடைந்தது.
இலங்கையின் பந்துவீச்சாளர் சாமாரி அதிகப்படியாக 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். இந்த தோல்வியினால், வங்கதேச அணி உலகக் கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: இந்தியா - தெ.ஆ. டெஸ்ட்: ரூ.60-இல் தொடங்கும் டிக்கெட் விலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.