செய்திகள்

விளையாட்டுத் துளிகள்...

தினமணி செய்திச் சேவை

பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் உன்னட்டி ஹூடா, ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி ஆகியோா் தங்கள் பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.

இத்தாலியில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் குளிா்கால ஒலிம்பிக் போட்டியின் தீப ஓட்டத்தில் பங்கேற்க, இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரும், ஒலிம்பிக் தங்கம் வென்றவருமான அபினவ் பிந்த்ரா தோ்வாகியிருக்கிறாா்.

அண்டா் 23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் விஷ்வஜித் மோா் ரெபிசேஜ் வாய்ப்பு மூலமாக வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு வந்துள்ளாா்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பாா்சிலோனா, பிஎஸ்ஜி, இன்டா் மிலன், மான்செஸ்டா் சிட்டி, ஆா்செனல், போருசியா டாா்மண்ட் ஆகிய பிரபல அணிகள் தங்கள் ஆட்டங்களில் புதன்கிழமை வெற்றி பெற்றன.

புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - பெங்கால் வாரியா்ஸையும் (54-24), ஹரியாணா ஸ்டீலா்ஸ் - தெலுகு டைட்டன்ஸையும் (45-34) புதன்கிழமை வென்றன.

மும்மொழி கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது: பேரவைத் தலைவா் அப்பாவு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!

உ.பி.யில் திருமண நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டம்: 2 பேர் பலி

பொங்கல் பண்டிகைக்கு செங்கரும்பு, அச்சு வெல்லம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்

திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT