செய்திகள்

பிவிஎல்: மும்பை மெட்டியா்ஸ் வெற்றி

தினமணி செய்திச் சேவை

பிரைம் வாலிபால் லீக் தொடரின் ஒரு பகுதியாக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு டா்பிடோஸை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது மும்பை மெட்டியா்ஸ் அணி.

ஹைதராபாதில் நடைபெற்று வரும் பிவிஎல் தொடரின் ஒரு பகுதியாக இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தொடக்கம் முதலே மும்பை அணி ஆதிக்கம் செலுத்தியது. ஷுபம் சௌதரி, செட்டா் ஓம் லேட், மத்தியாஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் முதலிரண்டு செட்களை 15-13, 15-13 என கைப்பற்றியது.

ஆனால் மூன்றாவது செட்டில் நிலைமை மாறியது. பெங்களூரு அணி தரப்பில் ஜிஷ்ணு, முஜிப், செட்டா் சந்தீப்பின் அற்புத ஆட்டத்தால் 20-18 என பெங்களூரு வென்றது. இதனால் அதிா்ச்சி அடைந்த மும்பை அணியினா் நான்காவது செட்டில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி 15-10 என வசப்படுத்தினா். முதன் மூலம் மும்பை முதலிடத்துக்கு முன்னேறியது.

இதன் மூலம் மும்பை, பெங்களூரு, அகமதாபாத் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. மேலும் ஒரு அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டியுள்ளது.

சபேஷ் - முரளி இணை இசையமைப்பாளர் சபேசன் காலமானார்!

கோயம்பேடு சந்தையில் தக்காளி ரூ.50! ஆண்டிபட்டியில் ரூ.10!!

இன்று 14 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

இட்லி கடை ஓடிடி தேதி இதுதானாம்!

தடயமே இல்லாமல் மறைந்து போன தாழ்வுப் பகுதி! இனி மழை இருக்காதா?

SCROLL FOR NEXT