ரியல் மாட்ரிட் அணிக்காக மிகவும் இள வயதில் ஃபிராங்கோ மாஸ்டன்டுவோனோ சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி சாதனை படைத்துள்ளார்.
18 வயதாகும் ஃபிராங்கோ மாஸ்டன்டுவோனோ ஆர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் வயதில் களமிறங்கி சாதனை!
18 ஆண்டுகள், 33 நாள்கள் ஆன நிலையில் ரியல் மாட்ரிட் அணிக்காக சாம்பியன்ஸ் லீக்கில் களமிறங்கி ஃபிராங்கோ மாஸ்டன்டுவோனோ சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக 18 ஆண்டுகள், 73 நாள்களில் ரியல் மாட்ரிட் அணிக்காக பிரேசில் நாட்டின் என்ட்ரிக் களமிறங்கியது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் லீக்கின் முதல் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கிளியன் எம்பாப்வே 28, 81-ஆவது நிமிஷங்களில் கிடைத்த பெனால்டியில் தவறாமல் கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
அடுத்த மெஸ்ஸியா?
மாஸ்டன்டுவோனோ ஆர்ஜென்டீனாவின் ரிவர் பிளேட் கிளப்பில் 6 ஆண்டுகளுக்காக ஒப்பந்தமாகியிருந்தார்.
ரியல் மாட்ரிட் அணிக்காக இவரை 45 மில்லியன் யூரோ விலை கொடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் பாதியில் மாஸ்டன்டுவோனோ கிட்டதட்ட கோல் அடிக்கும் நிலைக்குச் சென்ற நிலையில் எதிரணியினரால் தடுக்கப்பட்டது.
63-ஆவது நிமிஷத்தில் இவர் வெளியேற்றப்பட்டு பிரஹிம் டைஸ் மாற்றுவீரராக களமிறக்கப்பட்டார். இருந்தும் ரியல் மாட்ரிட் ரசிகர்கள் பலத்த வரவேற்பை அளித்தார்கள்.
ஆர்ஜென்டீன அணியில் இவருக்கு மெஸ்ஸியின் நம்.10 ஜெர்ஸி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.