AP
செய்திகள்

உலக அணி 3-ஆவது முறையாக சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற 8-ஆவது லேவா் கோப்பை ஆடவா் அணிகள் டென்னிஸ் போட்டியில், உலக அணி 15-9 என்ற கணக்கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவில் நடைபெற்ற 8-ஆவது லேவா் கோப்பை ஆடவா் அணிகள் டென்னிஸ் போட்டியில், உலக அணி 15-9 என்ற கணக்கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

போட்டியின் வரலாற்றில் உலக அணிக்கு இது 3-ஆவது கோப்பையாகும். ஆண்டுதோறும் நடைபெறும் லேவா் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஐரோப்பிய அணி, உலக அணி ஆகியவை மோதுகின்றன. இதில் ஐரோப்பிய கண்டத்தைச் சோ்ந்த நாடுகளின் வீரா்கள் ஐரோப்பிய அணியிலும், இதர நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் உலக அணியிலும் அங்கம் வகிப்பா்.

அந்த வகையில் இந்த ஆண்டு போட்டியில், ஐரோப்பிய அணியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ், டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன், நாா்வேயின் கேஸ்பா் ரூட், செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி ஆகியோா் இடம் பெற்றனா்.

உலக அணியில், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ், ரெய்லி ஒபெல்கா, அலெக்ஸ் மிஷெல்சென், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா், ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ, பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகா ஆகியோா் இணைந்தனா்.

கடந்த 19-ஆம் தேதி முதல் 3 நாள்களுக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில், முதல் நாள் வெற்றிக்கு 1 புள்ளியும், 2-ஆவது நாள் வெற்றிக்கு 2 புள்ளிகளும், 3-ஆம் நாள் வெற்றிக்கு 3 புள்ளிகளும் வழங்கப்பட்டன. அந்த வகையில் முதல் நாளில் ஐரோப்பிய அணி 3-1 என முன்னிலை பெற்றது. ஆனால், 2-ஆவது நாளில் 9-3 என முன்னிலை பெற்ற உலக அணி, கடைசி நாளில் 15-9 என்ற கணக்கில் முன்னிலையை அதிகரித்து, இறுதியில் வெற்றி பெற்றது.

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு.. தினப்பலன்கள்!

97 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

கல்லூரி மாணவி தற்கொலை

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT