கோல் அடித்த மகிழ்ச்சியில் ஜூலியன் அல்வரெஸ்.  படம்: எக்ஸ் / அத்லெடிகோ மாட்ரிட்.
செய்திகள்

மெஸ்ஸி வழியில் அல்வரெஸ்..! ரியல் மாட்ரிட்டை வீழ்த்திய அத்லெடிகோ!

அத்லெடிகோ மாட்ரிட் அணியின் அபார வெற்றி குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

லா லீகா தொடரில் அத்லெடிகோ மாட்ரிட் அணி தனது சொந்த மண்ணில் ரியல் மாட்ரிட் அணியை 5-2 என வீழ்த்தியது.

75 ஆண்டுகளில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக 5 கோல்களை அடித்து அத்லெடிகோ வரலாறு படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் ஜூலியன் அல்வரெஸ் 51-ஆவது நிமிஷத்தில் பெனால்டியிலும் , 63-ஆவது நிமிஷத்தில் ஃபிரி கிக்கிலும் கோல் அடித்து அசத்தினார்.

லா லீகா தொடரில் ரியல் மாட்ரிட் அணியை 2-5 என அத்லெடிகோ வென்றது.

இந்தப் போட்டியில் ரியல் மாட்ரிட் 25, 36ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, அத்லெடிகோ அணியினர் 14, 45+3, 51, 63, 90+3-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்கள்.

பார்சிலோனா அணியில் இருக்கும்போது மெஸ்ஸி ரியல் மாட்ரிட் அணியை பல முறை வீழ்த்தியுள்ளார். தற்போது, ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த அல்வரெஸும் இதை வெற்றிகரமாக செய்து வருகிறார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் அத்லெடிகோ மாட்ரிட் அணி 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்துக்கு முன்னேறியது.

Atletico Madrid defeated Real Madrid 5-2 on home soil in La Liga.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகிய தீண்டல்... பாவனி!

புதிதாய் மலர்ந்தேன்... அஸ்வதி!

கரூர் பலி: விஜய் சேதுபதி திரைப்பட நிகழ்வு ரத்து!

கன்னக்குழி... பரமேஸ்வரி!

கரூர் பலி: அனைத்து உடல்களும் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT