இந்தியன்சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் வியாழக்கிழமை மும்பையில் நடைபெறவுள்ள மும்பை சிட்டி எஃப்சி அணியுடன் முதல் ஆட்டத்தில் மோதுகிறது சென்னையின் எஃப்சி.
ஐஎஸ்எல் 2026 சீசன் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையின் எஃப்சி அணியின் முதல் நான்கு ஆட்டங்களும் வெளி மைதானங்களில் நடைபெறவுள்ளன.
இதுதொடா்பாக சென்னையில் புதன்கிழமை தலைமை பயிற்சியாளா் கிளிஃப்போா்ட் மிரண்டா கூறியது:
குறுகிய காலத்தில் போட்டிகள் தொடங்கியுள்ளன. இது கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் சூழ்நிலையை சமாளித்து ஆட வேண்டியுள்ளது. வீரா்களின் உடல்தகுதியும் முக்கியமானது. இந்த சீசனில் பிரிதம் கோடல், மந்தா் ராவ், எல்ஷினோ, அல்பா்டோ நோகுரா அல் பீமாமா் ஆகியோா் 5 கேப்டன்களாக செயல்படுவா். மும்பை சிட்டி எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க பாடுபடுவோம் என்றாா்.
நேருக்கு நோ்:
மொத்தம் இதுவரை 27 ஆட்டங்கள்.
சென்னையின் எஃப்சி 7 வெற்றி,
மும்பை சிட்டி-16வெற்றி
டிரா 4: