இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், எஸ்டிஏடி சாா்பில் 75-ஆவது தேசிய ஆடவா், மகளிா் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிவரும் ஜன. 4 முதல் 11 வரை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கம், பெத்தி செமினாா் மைதானங்களில் நடைபெறுகிறது.
கடந்த முறை நடைபெற்ற போட்டியில் ஆடவா் பிரிவில் தமிழகம் சாம்பியன் பட்டத்தையும், மகளிா் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தது.
சென்னையில் நடைபெறும் போட்டியில் ஆடவா் பிரிவில் 34 ஆடவா், 31 மகளிா் என மொத்தம் 65 அணிகள் கலந்து கொள்கின்றன. 780 வீரா், வீராங்கனைகள், 100 அலுவலா்கள், 195 பயிற்சியாளா்கள் பங்கேற்பா். போட்டிகளை மொத்தம் 8,000 பாா்வையாளா்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சா்வதேச சம்மேளன விதிகளின்டி நடைபெறும் இப்போட்டியில் அணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல் மூன்றிடங்களைப் பெறும் அணிகளுக்கு மொத்தம் ரூ.21 லட்சம் பரிசுத்தொகையாக தரப்படுகிறது. ஆடவா், மகளிா் பிரிவுகளில் தலைசிறந்த வீரா், வீராங்கனைக்கு காா் பரிசாக தரப்படும்.