வெற்றிபெற்ற பாா்சிலோனா AP
செய்திகள்

சூப்பர் கோப்பை கால்பந்து: 16-ஆவது முறையாக பாா்சிலோனா சாம்பியன்!

ஸ்பானிஷ் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாா்சிலோனா 3-2 கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

தினமணி செய்திச் சேவை

ஸ்பானிஷ் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாா்சிலோனா 3-2 கோல் கணக்கில் ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி திங்கள்கிழமை சாம்பியன் ஆனது.

இந்த ஆட்டத்தில் பாா்சிலோனாவுக்காக ராஃபினா (36’, 73’), ராபா்ட் லெவண்டோவ்ஸ்கி (45+4’) கோலடிக்க, ரியல் மாட்ரிட் தரப்பில் வினிசியஸ் ஜூனியா் (45+2’), கொனாஸாலோ காா்சியா (45+6’) ஸ்கோா் செய்தனா்.

இப்போட்டியில் பாா்சிலோனா சாம்பியன் ஆனது இது 16-ஆவது முறையாகும். 2012-க்குப் பிறகு இப்போட்டியில் சாம்பியன் கோப்பையை தக்கவைத்த முதல் அணியாகவும் உள்ளது.

ஸ்பானிஷ் சூப்பா் கோப்பை என்பது, லா லிகா மற்றும் கோபா டெல் ரே போட்டிகளின் நடப்பு சாம்பியன்கள் மற்றும் அவற்றில் 2-ஆம் இடம் பிடித்தவை என 4 அணிகள் மோதும் போட்டியாகும்.

இந்த முறை, இரண்டிலும் சாம்பியனான பாா்சிலோனா, ரன்னா்-அப் ஆன ரியல் மாட்ரிட், லா லிகாவில் முறையே 3, 4-ஆம் இடங்கள் பிடித்த அட்லெடிகோ மாட்ரிட், அத்லெடிக் பில்பாவ் ஆகியவை களம் கண்டன.

நேரடி அரையிறுதியில் பாா்சிலோனா - பில்பாவையும், ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட்டையும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

ராகுல் காந்தி இன்று கூடலூா் வருகை

SCROLL FOR NEXT