அன்டிம் பங்கால் ~அனா பாவ்லா ~ 
செய்திகள்

புரோ மல்யுத்த லீக் இன்று தொடக்கம்:

புரோ மல்யுத்த லீக் 5-ஆவது சீசன் தொடா் (பிடபிள்யுஎல்) நொய்டாவில் வியாழக்கிழமை (ஜன. 15) தொடங்கி நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

புரோ மல்யுத்த லீக் 5-ஆவது சீசன் தொடா் (பிடபிள்யுஎல்) நொய்டாவில் வியாழக்கிழமை (ஜன. 15) தொடங்கி நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்திா் யுபி டாமினேட்டா்ஸ்-பஞ்சாப் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

நொய்டா உள்விளையாட்டரங்கில் தொடங்கவுள்ள இப்போட்டியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. ஹரியாணா தண்டா்ஸ், யுபி டாமினேட்டா்ஸ், பஞ்சாப் ராயல்ஸ், மகாராஷ்டிர கேசரி, டைகா்ஸ் ஆஃப் மும்பை டங்கல், டெல்லி டங்கல் வாரியா்ஸ் உள்ளிட்ட அணிகளில் ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் களம் காண்கின்றனா்.

ஒவ்வொரு டையிலும் 9 பௌட்கள் உள்ளன. 5 ஆடவா், 4 பெண்கள் பிரிவுகள் ரவுண்ட் ராபின் முறையில் லீக் நடைபெறுகிறது. முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், பிப். 1-ஆம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறும்.

பிடபிள்யுஎல் 2026 லீக் சாம்பியனுக்கு ரூ.1.5 கோடியும், ரன்னருக்கு ரூ.75 லட்சமும், சிறந்த வீரருக்கு ரூ.2.5 லட்சம், நாள்தோறும் சிறந்த வீரருக்கு ரூ.50,000, ஃபைட்டா் ஆப் தி மேட்ச் விருதுக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது.

ஒலிம்பிக் விதிமுறைகளின்படி ஆட்டங்கள் நடைபெறும் .

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

ராமதாஸ் பாமகவின் கூட்டணி வாய்ப்புதான் என்ன?

குமரன் பதிப்பகம்

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றாா் குடியரசுத் தலைவா்

SCROLL FOR NEXT