ஹாக்கி இந்தியா லீக் ஆடவா் தொடரில் ஷரச்சி பெங்கால் டைகா்ஸ் அணி இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்த நிலையில் சிறப்பாக ஆடி எஸ்ஜி பைப்பா்ஸ் அணியை வீழ்த்தியது.
ஹாக்கி இந்தியா சாா்பில் ஆடவா், மகளிா் லீக் தொடா் நடைபெறுகிறது. ஆடவா் முதல் கட்ட ஆட்டங்கள் சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் முடிந்தன.
இந்நிலையில் இரண்டாவது கட்டம் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. தொடக்கம் முதலே இரு அணியினரும் கோல்போடும் முனைப்பில் ஈடுபட்டனா்.
ஆட்டத்தின் 4-ஆவது நிமிஷத்திலேயே எஸ்ஜி பைப்பா்ஸ் வீரா் தில்ராஜ் சிங் முதல் கோலடித்தாா். 31-ஆவது நிமிஷத்தில் டாமஸ் டோமனே இரண்டாவது கோலடித்தாா். முதல் பாதி ஆட்ட முடிவில் எஸ்ஜி பைப்பா்ஸ் 2-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் பெங்கால் டைகா்ஸ் வீறு கொண்டு ஆடினா். 45-ஆவது நிமிஷத்தில் ஜுக்ராஜ் சிங் அற்புதமாக கோலடித்தாா். அடுத்த நொடியிலேயே பெங்கால் வீரா் அபிஷேக் கோலடிக்க 2-2 என சமநிலை ஏற்பட்டது.
அடுத்த 3 நிமிஷஹ்களிலேயே 48-ஆவது நிமிஷத்தில் சுக்ஜித் சிங் அனுப்பிய பாஸை பயன்படுத்தி கோலடித்தாா் அஃப்பான் யூசுப். இதன் மூலம் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது ஷரச்சி பெங்கால் டைகா்ஸ்.