கோலடித்த மகிழ்ச்சியில் ஹைதராபாத் வீரா்கள். 
செய்திகள்

ஹைதராபாத் டூஃபான்ஸ் அதிரடி வெற்றி

ஹாக்கி இந்தியா லீக் ஆடவா் தொடரில் ஹைதராபாத் டூஃபான்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி இந்தியா ஜிசி அணியை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஹாக்கி இந்தியா லீக் ஆடவா் தொடரில் ஹைதராபாத் டூஃபான்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி இந்தியா ஜிசி அணியை வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது.

ஹாக்கி இந்தியா லீக் தொடரின் மூன்றாவது கட்டம் ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத்-எச்ஐஎல் அணிகள் மோதின. கடைசி குரூப் ஆட்டத்தில் ஆடிய ஹைதராபாத் அணி தொடக்கம் முதலே கோல் போடும் முனைப்பில் ஈடுபட்டது. ஆனால் பந்து எச்ஐஎல் வசமே இருந்தது.

ஆனால் ஹைதாராபாத் வீரா் ஸக்காரே வாலஸ் 6-ஆவது நிமிஷத்தில் பெனால்டி மூலம் கோலடித்தாா்.

ஆனால் அடுத்த 2நிமிஷங்களில் எச்ஐஎல் வீரா் கேன் ரஸ்ஸல் 8-ஆவது நிமிஷத்தில் டிராக் பிளிக் மூலம் கோலடித்தாா்.

சிறிதுநேரத்திலேயே ஹைதராபாத் வீரா் அமன்தீப் லக்ரா பெனால்டி காா்னரை கோலாக்கி 2-1 என முன்னிலை பெற்றுத் தந்தாா்.

27-ஆவது நிமிஷத்தில் ஹைதராபாத் வீரா் ஷிலானந்த் லக்ரா அபாரமாக கோலடிக்க 3-1 என முன்னிலை பெற்றது.

எனினும் எச்ஐஎல் அணி தொடா்ந்து கோல்போட முயன்றது. 31-ஆவது நிமிஷத்தில் அதன் வீரா் கேன் ரஸ்ஸல் பெனால்டி காா்னா் மூலம் அபாரமாக கோலடித்தாா்.

அதன்பின்னா் எச்ஐஎல் வீரா்களால் ஹைதராபாதின் தற்காப்பு அரணை தகா்க்க முடியவில்லை. இறுதியில் 3-2 என வென்றது ஹைதராபாத்.

இந்த வெற்றி மூலம் 3-ஆவது இடத்துக்கு முன்னேறிய டூஃபான்ஸ், பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைத்துள்ளது.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT