பார்சிலோனா மகளிரணி ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலமாக, மகளிருக்கான எல் கிளாசிக்கோவில் 20-1 என பாசிலோனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஸ்பெயினில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பார்சிலோனாவும் ரியல் மாட்ரிட் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் பார்சிலோனா 2-0 என வென்றது. போட்டியின் 28ஆவது நிமிஷத்தில் ப்ரக்ட்ஸ் கோல் அடித்தார். பின்னர் 93-ஆவது நிமிஷத்தில் பெனால்டியில் அலெக்ஸியா கோல் அடித்தார்.
இந்த வெற்றியுடன் ஆறாவது முறையாக ஸ்பானிஷ் சூப்பர் கோப்பையை பார்சிலோனா மகளிரணி வென்றது.
ஆடவர் பிரிவிலும் பார்சிலோன அணி ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி ஸ்பானிஸ் கோப்பையை சமீபத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.