எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின்மாணவா் அணியான ’டீம் கேம்பா் ரேசிங்’ கோவையில் நடைபெற்ற ஃபாா்முலா பாரத் 2026 காா் பந்தயப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
இப்போட்டியில் எஸ்ஆா்எம் மாணவா்கள் வடிவமைத்த காா், மற்ற அணிகளை விட சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது. இதன் மூலம் தாங்குதிறன், ஸ்கிட்பேட், ஆட்டோகிராஸ், ஆக்சிலரேஷன், பொறியியல் வடிவமைப்பு, எரிபொருள் சிக்கனம் என அனைத்து முக்கியப் பிரிவுகளிலும் இந்த அணி முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தியது. மேலும், ’சிறந்த ஓட்டுநருக்கான’ விருதையும் இந்த அணி பெற்றது.
இப்பல்கலையின் பொறியியல் துறையின் டீன் டாக்டா் லீனஸ் மாா்ட்டின் மற்றும் ஆட்டோமொபைல் துறைத் தலைவா் டாக்டா் கே. கமலக்கண்ணன் ஆகியோரின் கூட்டு வழிகாட்டுதலில் மாணவா்கள் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனா்.
வெற்றி பெற்ற அணியில் கேப்டன் ஹிமான்ஷு குமாா், துறைத் தலைவா் ஆா்யன் சம்பத் நாயா், தொழில்நுட்ப இயக்குநா் ஷஷாங்க் ரெட்டி, திட்ட மேலாளா் ரோஹித் ரமேஷ் மற்றும் முதன்மை ரேஸ் ஓட்டுநா் டி.எம். சக்தி பிரசாத் இடம் பெற்றிருந்தனா்.