டி20 உலகக் கோப்பை

இந்தியாவுக்கு எதிராகப் பிரபல நியூசி. வீரர் விளையாடுவது சந்தேகம்

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

DIN

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்துள்ளன. இதனால் ஞாயிறன்று இரு அணிகளுக்கிடையே நடைபெறும்  ஆட்டத்தில் இரு அணிகளும் வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதில் தோல்வியடையும் அணியால் அவ்வளவு எளிதாக அரையிறுதிக்குத் தகுதி பெற முடியாது.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் காயம் அடைந்தார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வீசிய பந்து, கப்திலின் காலைப் பதம் பார்த்தது. இதனால் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். 

காயம் காரணமாக ஆட்டத்தின் முடிவில் அசெளகரியமாக உணர்ந்தார் கப்தில். அடுத்த இரு நாள்களில் இதன் நிலவரம் தெரிய வரும் என்று நியூசிலாந்து பயிற்சியாளர் கேரி ஸ்டட் கூறினார். 

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் பங்குபெறுவது முக்கியமானதாகும். ஏற்கெனவே, வேகப்பந்து வீச்சாளர் ஃபெர்குசன் காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அடுத்ததாக கப்திலும் நியூசிலாந்து அணியில் இடம்பெறாவிட்டால் அது அந்த அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேளாண் அறிவியல் நிலையம் சாா்பில் மகளிா்களுக்கான மாற்று வாழ்வாதாரப் பயிற்சி

தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: செங்கல்பட்டு மாணவா்கள் சிறப்பிடம்

பிரிக்கப்பட்ட நியாய விலைக் கடைகளுக்கு ரூ.53 கோடியில் விற்பனை முனைய இயந்திரங்கள்: அமைச்சா் அர. சக்கரபாணி

வீல்ஸ் இந்தியா லாபம் ரூ.32 கோடி

போ்ணாம்பட்டில் 3 சிறுவா்களை கடித்த வெறி நாய்

SCROLL FOR NEXT