டி20 உலகக் கோப்பை

இலங்கை 154 ரன்கள் குவிப்பு: ஆஸ்திரேலியாவைக் கட்டுப்படுத்துமா?

DIN


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இலங்கைக்கு பதும் நிசன்கா சரியான தொடக்கம் தராமல் 7 ரன்களுக்கு பாட் கம்மின்ஸ் வேகத்தில் வீழ்ந்தார். ஆனால், சாரித் அசலங்கா மற்றும் குசால் பெரேரா பவர் பிளேவில் அதிரடி காட்டி ரன் ரேட்டை உயர்த்தினார்.

இதனால், அந்த அணி பவர் பிளே முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்தது.

ஆனால், நடு ஓவர்களில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தியது. பெரேரா மற்றும் அசலங்கா தலா 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சோபிக்கத் தவற பனுகா ராஜபட்ச மட்டும் இறுதியில் சற்று அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்தினார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் மற்றும் ஆடம் ஸாம்பா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT