டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை: மே.இ. தீவுகள் அணியில் சேர்க்கப்பட்ட முன்னாள் கேப்டன்

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடிய மே.இ. தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஒபெட் மெக்காய், காயம் காரணமாக டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து மாற்று வீரராக அணியில் இருந்த முன்னாள் டெஸ்ட் கேப்டன் ஜேசன் ஹோல்டர், 15 பேர் கொண்ட மே.இ. தீவுகள் அணியில் இணைந்துள்ளார். 29 வயது ஹோல்டர், 27 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்த மே.இ. தீவுகள் அணி, 2-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. 

நாளை பகலில் நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேச அணியை மேற்கிந்தியத் தீவுகள் அணி எதிர்கொள்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT