டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை: 'கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம்' இயக்கத்துக்கு ஆதரவை வெளிப்படுத்திய டி காக்

DIN

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கான தனது ஆதரவை வெளிப்படுத்தினார் தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டி காக்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

தெ.ஆ. அணியில் கிளாசென்னுக்குப் பதிலாக டி காக் இடம்பெற்றுள்ளார். இலங்கை அணியில் மாற்றம் எதுவுமில்லை.

சில நாள்களுக்கு முன்பு இருந்ததை விடவும் அணியினரின் மனநிலை தற்போது நன்றாக உள்ளது. டி காக்கும் ஆர்வத்துடன் உள்ளார். இந்த ஆட்டத்துக்கு நாங்கள் நன்குத் தயாராகியுள்ளோம் என தெ.ஆ. கேப்டன் பவுமா கூறியுள்ளார்.  

கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் டி காக் விலகினார். இதனால் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டது. எனினும் தன்னுடைய நிலையை விளக்கிய டி காக், தென்னாப்பிரிக்க அணியில் மீண்டும் விளையாடவுள்ளதாக அறிவித்தார்.

இன்றைய ஆட்டத்தில் அனைவருடைய கவனமும் டி காக்கின் மீது இருந்தது. கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு எந்த விதத்தில் தனது ஆதரவை வெளிப்படுத்துவார் என்று. இந்நிலையில் இன்று ஆட்டம் தொடங்கும் முன்பு, மற்ற வீரர்களுடன் இணைந்து மண்டியிட்டு, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கான தனது ஆதரவை டி காக் வெளிப்படுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்ள வாய்ப்பு!

மயக்கும் விழிகள்! ஸ்ரீலீலா..

டி20 உலகக் கோப்பையில் 3-வது வீரராக ஷகிப் களமிறங்குகிறாரா?

ஹிப்ஹாப் ஆதியின் பி.டி. சார் டிரைலர்!

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

SCROLL FOR NEXT