படம் | கிரிக்கெட்.காம்.ஏயு (எக்ஸ்)
டி20 உலகக் கோப்பை

டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

DIN

டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ஓமனுக்கு எதிரான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஆடம் ஸாம்பா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஓமனுக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் டி20 போட்டிகளில் ஆடம் ஸாம்பா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 332 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆண்ட்ரூ டை முதலிடத்தில் உள்ளார்.

ஆடம் ஸாம்பா

டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்கள் வரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ (573 போட்டிகள், 625 விக்கெட்டுகள்), ஆப்கானிஸ்தான் அணியின் ரஷித் கான் (426 போட்டிகள், 576 விக்கெட்டுகள்) மற்றும் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சுனில் நரைன் (513 போட்டிகள், 552 விக்கெட்டுகள்) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

இதுவரை 258 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஆடம் ஸாம்பா 301 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT