Ramon Espinosa
டி20 உலகக் கோப்பை

75க்கு சுருண்ட நியூசிலாந்து: அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்!

டி20 உலகக் கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

DIN

டி20 உலகக் கோப்பை போட்டியின் குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 159/6 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான குர்பாஜ் (80), இப்ராஹிம் ஜர்டன்(44) சிறப்பாக விளையாடினார்கள்.

அடுத்து வந்த பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள்> நியூசிலாந்து சார்பில் போல்ட், ஹென்றி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

அடுத்து ஆடிய நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் பந்து வீச்சில் 75 ரன்களுக்கு சுருண்டது.

நியூசிலாந்தில் அதிகபட்சமாக க்ளென் பிலிப்ஸ் 18, மேட் ஹென்ரி 12 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தார்கள். இதனால் நியூசிலாந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

கேப்டன் ரஷித் கான், பரூக்கி தலா 4 விக்கெட்டுகளும் மொகமது நபி 2 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.

இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்று நெட் ரன் ரேட்டில் +5.225 பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT