இமாத் வாசிம் படம் | AP
டி20 உலகக் கோப்பை

இந்தியாவுக்கு எதிராக வேண்டுமென்ற பந்துகளை வீணடித்த இமாத் வாசிம்; பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இமாத் வாசிம் வேண்டுமென்ற பந்துகளை வீணடித்ததாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இமாத் வாசிம் வேண்டுமென்ற பந்துகளை வீணடித்ததாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று முன் தினம் (ஜூன் 9) நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. 120 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இமாத் வாசிம் வேண்டுமென்ற பந்துகளை வீணடித்ததாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சலீம் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: இமாத் வாசிம் விளையாடியதைப் பாருங்கள். அவர் பந்துகளை வீணடித்தது இலக்கை துரத்திப் பிடிப்பதை கடினமாக்கியது. அவர் வேண்டுமென்ற பந்துகளை வீணடிப்பது போன்று இருந்தது என்றார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இமாத் வாசிம் 23 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT