சூர்யகுமார் யாதவ் PTI
டி20 உலகக் கோப்பை

மோசமான சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்!

டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் மோசமான சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

DIN

டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ் மோசமான சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியா - அமெரிக்கா நேற்று பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய அமெரிக்க அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 19-வது ஓவரில் இலக்கை சேஸ் செய்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில் சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். ஆனால் இந்தப் போட்டியின் மூலம் சூர்யகுமார் யாதவ் மோசமான சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதாவது, மெதுவாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் மெதுவாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியல்:

மொகமது ரிஸ்வான் - 52 பந்துகள் (2024)

டேவிட் மில்லர் - 50 பந்துகள் (2024)

டெவான் ஸ்மித் - 49 பந்துகள் (2007)

டேவிட் ஹஸ்ஸி - 49 பந்துகள் (2010)

சூர்யகுமார் யாதவ் - 49 பந்துகள் (2024)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி, பிரிட்டன் பயணம் ரூ.15,516 கோடி அந்நிய முதலீடுகளை ஈர்த்திருப்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

இறைச்சித்தம் வழங்கிய தலைமைக் கொடை!

நம்பிக்கை கொடுக்கிறது!

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு முழு தடை விதிக்க கோரிக்கை

SCROLL FOR NEXT